புதிய அப்டேட்
லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியான வரலாற்று திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இதில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதனையடுத்து இதன் இரண்டாம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே ‘பொன்னியின் செல்வன் -2’ வருகிற ஏப்ரம் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Good morning 3rd persons!
Guess what’s happening for what ?
1 Clue is 2January 3rd
P s 2 dubbing— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 3, 2023

