தமிழ்நாடு

நிர்பயா பாதுகாப்பான நகர திட்டம் ; பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்!

மாநகரப்பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்டு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதற்கட்ட செயல்பாடு

போக்குவரத்து துறை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக ‘நிர்பயா பாதுகாப்பான நகர திட்டத்தின்’ கீழ் 2500 மாநகர போக்குவரத்துக்கு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தானை பொருத்தும் பணி தொடங்கபட்டு உள்ளது. இன்று இத்திட்டத்தின் முதற்கட்ட செயல்பாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

கண்காணிப்பு முறை

ஒவ்வொரு பேருந்துகளிலும் 3 கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்ஒர்க் வீடியோ ரெகார்ட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இந்த முழு அமைப்பும் மாநகர போக்குவரத்துக்கு கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைத்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்கப்படும். மேலும், பொத்தானை அழுத்தியதும் கட்டளை மையத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கும். மேலும், அங்கு நடக்கும் அனைத்தையும் பேருந்திலுள்ள கேமராக்கள் பதிவு செய் தொடங்கிவிடும்.

இந்த ஒளித்தூண்டுதலை கொண்டு செயலியை இயக்கும் நபரின் நிகழ்நேர நிலைமையை கண்காணித்து அடுத்தகட்ட நடவடிக்கை ஆவணம் செய்யபடும். இதற்கான கட்டளை மையம் காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் அவசரகால பதில் மையத்துடன் இணைக்கப்படும்.

பயன்

பயணிகளுக்கு மற்ற நபர்களால் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் சம்பவங்களை, அவசர அழைப்பு பொத்தானை அழுத்தி பதிவு செய்யலாம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்துக்குதுறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

Related posts