திடீர் சந்திப்பு
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்கி வருகிறார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கன்னட நடிகர் சிவராஜ் குமார், வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்று நடிகர் ரஜினியை சந்தித்துள்ளார். ரோபோ சங்கரின் 22-வது திருமணநாளையொட்டி வாழ்த்து பெறுவதற்காக முன்அனுமதி பெற்று சந்தித்ததாக தெரிகிறது.

