சினிமாவெள்ளித்திரை

மீண்டும் நடிக்க தொடங்கிய பாரதிராஜா!

படப்பிடிப்பு

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருசிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அவர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வந்த ‘மேகங்கள் கலைகின்றன’ என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இதனிடையே உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ‘மேகங்கள் கலைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் பாரதிராஜா படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை இயக்குனர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts