வைரல் பாடல்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பதான்’. இதில் நடிகை தீபிகா படுகோனே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதனையடுத்து இத்திரைப்படத்தின் ‘பேஷ்ரம் ரங்’ எனும் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இப்பாடலில் நீச்சல் உடையில் நடித்ததற்காக தீபிகா படுகோனே 50 சதவீதம் கூடுதலாக சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
கண்டனம்
இந்நிலையில், இந்த பாடலுக்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்த பாடல் அசுத்தமான மனநிலையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாடலின் வரிகள் மற்றும் உடைகள் திருத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.