வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்ற இவருக்கு திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தார். இகனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ‘இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை’ என அறிவித்தார்.
இந்நிலையில், நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கனும்! இந்த கனவு இனி தமிழகத்தில் நனவாக வாழ்த்துகள் முதலாளி’ என குறிப்பிட்டுள்ளார்.
நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் பந்தையங்களும் போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கனும்!
இந்த கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி @Udhaystalin 😊— Santhanam (@iamsanthanam) December 14, 2022

