சினிமாதமிழ்நாடு

கோலாகலமாக தொடங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா!

திரைப்பட விழா

சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் மாலை 6 மணியளவில் தொடங்கவுள்ளது. இதனை செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைக்கிறார். வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் மொத்தம் 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.

திரையிடல் 

இதில் ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசட தபற, நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பபூன், யுத்த காண்டம் உள்ளிட்ட12 தமிழ் படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை சத்யம் சினிமாவில் 4 திரையரங்குகள் மற்றும் அண்ணா திரையரங்கம் உள்பட 5 திரையரங்குகளில் மொத்தம் 4 காட்சிகள் என 8 நாட்களுக்கு 20 படங்கள் திரையிடப்படவுள்ளது.

Related posts