ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மின் கட்டண உயர்வு
தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி சுமையில் இருப்பதாக கூறி தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த ஆண்டு 52 சதவீதம் வரை மின்கட்டண உயர்வை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவீதம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளது.
ராமதாஸ்
தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் மீண்டு வர முடியவில்லை. இந்நிலையில், ஆண்டுதோறும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாழவே முடியாது இது மக்களை கசக்கிப் பிழியும் செயல். எனவே இந்த முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும்’ என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

