சினிமாவெள்ளித்திரை

அடுத்த ரிலீஸுக்கு தயாரான பிரபல நடிகை!

ரிலீஸ் தேதி 

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘பூங்குழலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில ‘அம்மு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ட்ரிப்பிள்ஸ் வெப் தொடரை இயக்கிய சாருகேஷ் சேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், அம்மு திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 19-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts