சினிமாவெள்ளித்திரை

ஜி.வி.பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார்’.

சூப்பர் அப்டேட்

இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘சர்தார்’ படத்தின் பின்னணி இசை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts