சினிமா

இந்த வருடம் தல-திபாவளி தான்; AK61 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது!

இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணையும் படம் அஜித் 61. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

வினோத் அஜித் கூட்டணி

கடந்த 2019ம் ஆண்டு வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ . போனி கபூர் தயாரித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் இத்திரைப்படம் பிங்க் என்ற ஹிந்தி படத்தின் தழுவல் என்பதால், ஒரு ஒரிஜினல் கதையை எடுக்க விரும்பினார் நடிகர் அஜித். அதனால் அதே கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை என்ற படத்தை தொடங்கியது.

Ajith Kumar's 'Valimai' Release Date Confirmed: Worldwide Release on 24th February

4 மொழிகளில் வெளியீடு

2020ம் ஆண்டு வெளியாகியிருக்க வேண்டிய வலிமை படம் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியீடு தள்ளி போடப்பட்டது. அதனையடுத்து, இரண்டு ஆண்டுகள் ரசிகர்களின் காத்திருப்புக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. மேலும், தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் ரூ.100 கோடியைக்கு மேல் வசூல் செய்தது.

அஜித் 61

வலிமை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித்தின் 61 வது படத்தையும் வினோத் தான் இயக்குகிறார் என்ற செய்தி வந்தது. இந்நிலையில், ‘நேர்க்கொண்ட பார்வை’ வலிமை படங்களை தயாரித்த போனி கபூர் இப்படத்தையும் தயாரிக்கிறார். இதனால் இயக்குனர் வினோத், அஜித்,போனி கபூர் மூவரும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இது. மேலும், படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது.

Ajith 61 Shooting Begin Update

தீபாவளி ரீலீஸ்

இதற்காக ஐதராபாத் பிலிம் சிட்டியில் 9 ஏக்கரில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 2022 தீபாவளிக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் இதனை தல-தீபாவளி என்று கொண்டாடி வருகிறார்கள்.

இதனையடுத்து ‘அஜித் 62’ படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts