அரசியல்தமிழ்நாடு

அதிமுக தற்போது அடமான திமுகவாக உள்ளது. அண்ணா திமுகவாக இல்லை – கி.வீரமணி !

அதிமுகவில் யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

திராவிடர் கழகம்

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு நடைபெற்றது. அந்த கூட்டத்தை கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் மாணவர்கள் பெருந்தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு கூட்டத்தில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும், அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தல் ஆகிய 8 தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி

கி.வீரமணி பேச்சு

அதனைத்தொடர்ந்து அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து கி.வீரமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக, பாஜக இடையே யார் எதிர்கட்சி என்று நடந்த போட்டி தற்போது எதிர்கட்சிக்குள் யார் எதிர்கட்சி என்ற போட்டியாக மாறிவிட்டது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

K.Veeramani

அடமான திமுக

நல்ல இயக்கமான அதிமுக கொள்கையை முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்வது மிகவும் கவலை அளிக்கிறது. அதிமுகவில் தனது கட்சியின் தலைவியை மறந்து விட்டு தற்போது தலைவர் பதவிக்காக போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள். யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்க வேண்டும். அதிமுக அடமான திமுகவாக உள்ளது, அண்ணா திமுகவாக இல்லை. தங்கள் வருமானத்தை பார்க்காமல் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்கும் வழியை பார்க்க வேண்டும்’ என்று கி.வீரமணி கூறினார்.

Related posts