சினிமாவெள்ளித்திரை

சூர்யா இடத்தை நிரப்பிய அருண் விஜய்!

பிரபல நடிகர்

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து, நடித்து வந்த திரைப்படம் ‘வணங்கான்’. இயக்குனர் பாலா இப்படத்தை இயக்க, நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தமானார். கன்னியாகுமரியில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அந்த மாற்றங்கள் சூர்யாவிற்கு பொருந்தாது என்பதால் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், வணங்கான் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts