சமூகம்சினிமா

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தள்ளுமுள்ளு : போலீஸார் காயம்!

இசை வெளியீட்டு விழா

விஜய் நடிப்பில், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்க, நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கு நுழைவு வாயிலில் திரண்டனர். போலீஸார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தினர். அப்போது போலீஸார் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Related posts