டெல்லி சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் 24ம் தேதி முடிவடைகிறது. எனவே அவருக்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி சென்றார். ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், டெல்லி சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.