ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வடவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பிற்க்காக சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.
தண்ணீர் திறப்பு
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வடவாய்க்காலில் பாசனத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வடகாலில் திறக்கப்பட்ட தண்ணீர் சீராக வருகிறதா ? என நேற்று ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ குலையன்கரிசல் பஞ்சாயத்தில் உள்ள போடமாள்புரம் மடைப்பகுதியில் ஆய்வு செய்தார். அவருடன் பொறியாளர் பாஸ்டின்வினோ, சேர்வைகாரன்மடம் விவசாய சங்கத் தலைவர் பொன்ராஜ் உள்பட விவசாயிகள் பங்கேற்றனர்.

