அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இபிஎஸ் அறிவிப்பு
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தற்போது ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.

