சினிமாபயணம்

கோவிலில் நடிகர் அஜித் – வைரலாகும் புகைப்படம் !

நடிகர் அஜித் கோவில்களில் சாமி தரிசனம் செய்யும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்

தற்போது எச்.வினோத் இயக்கி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் அஜித்ன் லடாக் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த பயணத்தில் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், நடிகர் அஜித் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts