சமூகம்தமிழ்நாடு

வண்டலூரில் சிங்கங்களை பார்க்கும் சவாரி திட்டம் விரைவில் தொடக்கம்!

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

சவாரி திட்டம்

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிரியல் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்கா, பறவைகள் கூடம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் அருங்காட்சியம், இரவு நேர விலங்குகள் இல்லம், பாம்புகள் இல்லம் ஆகியவையை காண பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் தற்போது பறவைகள் கூடம், இரவு நேர விலங்குகள் இல்லம், பாம்புகள் இல்லம் போன்றவை பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் சவாரி திட்டம் இன்னும் செயல்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts