நாம் முன்பிருந்து பயன்படுத்துகிற தொலைக்காட்சி பெட்டியில் காட்சிகளை காண கேபிள் அல்லது டிஷ் மூலமாகவோ இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். நாம் சேனல்களை மாற்றி நமக்கு வேண்டிய நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ள முடியும்.
தற்போது மார்க்கெட்டில் இணைய வசதியுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டிகள் விற்பனைக்கு வந்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். பலர் அதனை பயன்படுத்தவும் தொடங்கி இருக்கலாம்.
இன்டர்நெட் இணைப்போடு கூடிய இந்தவகை ஸ்மார்ட் டிவி யின் மூலமாக YouTube , Netflix உள்ளிட்ட பல வீடியோ தளங்களை பார்க்க முடியும். சாதாரண டிவியாகவும் இவை செயல்படும்.
கணினி , மொபைல் போன்றவற்றை கடந்து இன்று தொலைக்காட்சியிலும் இன்டர்நெட் புகுந்துவிட்டது. ஸ்மார்ட் டிவியில் YouTube போன்ற வீடியோ தளங்களில் தோன்றுகிற விளம்பரம் தான் Connected TV Advertising ஆகும்.
எப்படி மொபைல் போன்களில் இணையத்தளத்தையோ அல்லது YouTube வீடியோவையோ பார்க்கும் போது விளம்பரங்கள் தோன்றுகிறதோ அதனை போன்றே டிவி யிலும் விளம்பரங்கள் காட்டப்படும்.
சாதாரண டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது ஒரே மாதிரியான விளம்பரங்கள் தான் வரும் . ஆனால் ஸ்மார்ட் டிவியில் வீடியோக்களை பார்க்கும் போது “Targeted” விளம்பரங்கள் காட்டப்படும்.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது தான் ஸ்மார்ட் டிவி பயன்பாடு துவங்கி இருக்கிறது. அதிவேக இன்டர்நெட் சேவை காரணமாக Connected TV Advertising ம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்.
அதிவேக இன்டர்நெட் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவி வைத்திருப்பவர்களின் என்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலை தான் Connected TV Advertising வாய்ப்பினை திறந்து வைத்துள்ளது.
பட்ஜெட்
மொபைல் போன்களில் ஒரே ஒரு நபர் தான் விளம்பரத்தினை பார்ப்பார். ஆனால் ஸ்மார்ட் டிவியில் 2 முதல் 3 நபர்கள் வரை பார்ப்பார்கள். இந்த எண்ணிக்கை Advertisers க்கு மிகப்பெரிய அளவில் லாபகரமானதாக அமையும்.
விளம்பரங்களின் தரம்
மொபைல் போன்களில் விளம்பரங்களை காணும்போது அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. ஆனால் மிகப்பெரிய ஸ்மார்ட் டிவியில் HD தரத்திலான வீடீயோ விளம்பரங்களை காணும்போது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Completion Rate
மிகப்பெரிய திரைகளை ஸ்மார்ட் டிவி க்கள் பெற்று இருக்கும் என்பதனால் அதிக Viewability [பார்வையாளர்களின் பார்வையில் படுதல்] கண்டிப்பாக இருக்கும். ஸ்மார்ட் டிவி யில் விளம்பரங்களை அதிக நேரம் பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் Completion Rate ம் அதிகமாக இருக்கும்.
Measurable
ஸ்மார்ட் டிவியில் விளம்பரங்கள் இன்டர்நெட் மூலமாக காட்டப்படுவதனால் எத்தனை பேருக்கு விளம்பரங்கள் காட்டப்படுகின்றன என்பதனை அறிந்துகொள்ள முடியும். அதற்கேற்றவாறு மட்டும் செலவழித்தால் மட்டுமே போதுமானது.