ஜியோ நிறுவனம் டெலிகாம் துறையில் நுழைந்த பிறகு மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா அடைந்திருக்கிறது. போட்டியில் ஆரோக்கியமற்ற தன்மை என குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் , ஜியோ மும்முரமாக முன்னேறிக்கொண்டே இருக்கிறது.
ஜியோ வருகையால் இணையப்பயன்பாடு அதிகமாகியிருக்கிறது. ஜியோ வருகைக்கு முன்பு 1 GB டேட்டா 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் ஜியோ அறிமுகமானபோது இலவசமாக டேட்டாவினை வாரி வழங்கியது.
ஒரு நாளைக்கு 4 GB அளவில் 127kbps வேகத்தில் வழங்கியது. இலவச அழைப்புகள், மெசேஜ்கள் என அதிரடி காட்டியது. இதனால் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை குறைத்தன.
அதுவரைக்கும் ஒரு மாதத்திற்கு 1 GB டேட்டா வழங்கிய நிறுவனங்கள், பிறகு அதே விலைக்கு ஒரு நாளைக்கு 1 GB டேட்டா வழங்கிட முன்வந்தன.
ஜியோவின் வருகையால் இணைய கட்டணங்கள் குறைந்தன. மிகப்பெரிய அளவில் இணையப்பயன்பாடு இந்தியாவில் அதிகரித்தது. சராசரியாக ஒருவர், மாதத்திற்கு 10 GB வரை டேட்டா பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
ஜியோ வந்த 6 மாதத்தில் 20 கோடி GB ஆக இருந்த இணையப்பயன்பாடு பின்னர் 120 கோடி GB ஆக மாறியிருக்கிறது. தற்போது இது மிகப்பெரிய அளவில் கூடியிருக்கும்.
ஜியோ வருகையினால் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுமே கட்டணங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயின. இதனால் பொருளாதார பிரச்சனையில் சிக்கித்தவித்தன.
மத்திய அரசின் ஆதரவினால் மிகப்பெரிய அளவில் ஜியோ வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜியோ வருகையினால் நாடு முழுமைக்கும் இணையப்பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை கிடைத்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இந்தியாவில் சமூக வலைதளங்கள், Facebook , Twitter , YouTube , Instagram போன்றவவை மிக அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் மிகக்குறைவான விலையில் டேட்டா கிடைப்பதனால் தான்.
இணையப்பயன்பாடு அதிகரித்ததால்,டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வளர்ச்சியடைந்தது . உதாரணத்திற்கு இன்று YouTube மூலமாக ஏராளமானவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். இதேபோன்று பல்வேறு சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் அதிகமானவர்கள் சம்பாதிக்கிறார்கள்.