Monday Special

ஹார்ப் (HAARP) – வானியல் ஆராய்ச்சியா ? இயற்கைக்கு எதிரான சதியா ? விலகாத மர்மங்கள்

உலகம் முழுமைக்கும் HAARP திட்டம் பற்றி பேசப்பட்டாலும் தற்போது தமிழகத்தில் கஜா புயலுக்கு பிறகு HAARP திட்டம் பற்றிய தேடல் அதிகமாகி இருக்கிறது. HAARP திட்டம் என்பது அமெரிக்கா அயனிமண்டலத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்வதற்காக ஏற்படுத்திய திட்டம். ஆனால் சில கோட்பாட்டாளர்களோ அமெரிக்கா வடிமைத்துள்ள HAARP இன் மூலமாக வானிலையை கட்டுப்படுத்திட முடியும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் அதிக மழையோ, புயலோ, வறட்சியோ, நிலநடுக்கமோ உண்டாகுமாறு செய்ய முடியும் என்கிறார்கள்.

HAARP என்பதன் ஆங்கில விளக்கம் “High Frequency Active Auroral Research Program” . University of Alaska Fairbanks இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவெனில் HAARP என்பது வளிமண்டல அடுக்குகளில் ஒன்றான அயனிமண்டலத்தை ஆராய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டம். HAARP ஆராய்ச்சி கூடத்தை இயக்குவதற்கான பொறுப்பினை அமெரிக்க வான்படை ஆகஸ்ட் 11,2015 அன்று University of Alaska Fairbanks இடம் ஒப்படைத்தது.

மேலும் இந்த கருவியின் மூலமாக அயனிமண்டலத்தின் எந்தவொரு இடத்திலும் தற்காலிக தாக்கத்தை அதிர்வலைகள் மூலமாக ஏற்படுத்திட முடியும்.

அதன் தாக்கங்களை அறிவதற்கான கருவிகளும் அங்கே இடம்பெற்றுள்ளன.

மேற்கூறிய விளக்கங்கள் HAARP ஐ உருவாக்கியவர்கள் கொடுத்திருக்கக்கூடிய விளக்கங்கள். அவற்றில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். அடுத்ததாக HAARP ஐ எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.

எதிர்ப்பாளர்களின் விளக்கப்படி HAARP என்பது மனித காதுகள் கேட்கும் அளவிலான ரேடியோ அலைகளை அனுப்புவதற்க்கான அமைப்பு இல்லை. ஒரு சராசரி ரேடியோ நிலையத்தில் இருக்கும் ஆண்டெனாவின் மூலமாக அனுப்பப்படும் ஆற்றலை விட பல மடங்கு அதிகமான ரேடியோ ஆற்றலை இந்த நிலையத்தில் இருக்கும் ஆண்டெனாவின் மூலமாக அனுப்பிட முடியும். 72 அடி உயர ஆன்டெனாக்கள் 1810 இந்த அமைப்பில் இருக்கின்றன. இவற்றின் வடிமைப்பே மில்லயன் வாட்ஸ் அளவிலான ELF (extremely low frequency) ரேடியோ அலைகளை உருவாக்கி வளிமண்டலத்தில் செலுத்துவதற்கும் உள்வாங்குவதற்குமானது.

அமெரிக்க வான்படை கூறுகின்ற விளக்கத்தின் படி, HAARP என்பது வளிமண்டலத்தின் மிக முக்கிய அடுக்காக கருதப்படுகின்ற அயனிமண்டலத்தின் பண்புகளை ஆராய்வதற்கான ஓர் அமைப்பு. பொதுமக்களின் நலனுக்காகவும் ராணுவ பாதுகாப்பு பயன்பாடுகளுக்காகவும் இதனை செய்வதாக கூறியுள்ளது.

ஒரு மிகப்பெரிய பேராற்றலை அயனிமண்டலத்தை நோக்கி அனுப்பிடும் போது அது அயனி மண்டலத்தை மேல்நோக்கி தள்ளும். இப்படியொரு நிகழ்வு நடைபெறும்போது அயனி மண்டலத்திற்கு கீழே இருக்கக்கூடிய ஸ்டரெட்டோஸ்பியர் அந்த இடைவெளியை நிரப்ப மேல்நோக்கி செல்லும். அப்போது வளிமண்டலத்தில் மாற்றங்கள் நடக்கும்.

இதனை அறிந்துகொண்டால் நிச்சயமாக வளிமண்டலத்தை கட்டுப்படுத்திட முடியும் வாய்ப்பு இருப்பதாகவே கூறுகிறார்கள் HAARP எதிர்ப்பாளர்கள்.

5 ரிக்டர் அளவுக்கும் அதிகமான நிலநடுக்கங்களை நாசா ஆய்வு செய்ததில் அவற்றில் பெரும்பாலாவை அயனோஸ்பியரில் நடந்த மின் தொந்தரவினால் (electrical disturbance) நடைபெற்றுள்ளது என கண்டறிந்துள்ளனர்.

HAARP போன்றதொரு அமைப்பினால் வளிமண்டலத்தை கட்டுப்படுத்தி பூமியின் எந்தவொரு பகுதியிலும் மழைப்பொழிவு உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய பேராபத்தாக இருக்கும். மேலும் அமெரிக்கா மட்டுமே இப்படியொரு அமைப்பினை வைத்திருக்கும் மற்ற நாடுகளிடம் இது இருக்காது எனவும் கூற இயலாது.

பூமி வெப்பமயமாதலினால் தான் சுற்றுசூழல் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு கனமழை , வெள்ளம் , புயல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன என நாம் இதுவரை நம்பிக்கொண்டு இருக்கிறோம். அதற்க்கான வாய்ப்புகள் 100 சதவிகிதம் உண்டு. அதோடு சேர்த்து சில நாடுகள் HAARP போன்றதொரு அமைப்பினால் வளிமண்டலத்தை கட்டுப்படுத்தி பூமியில் அழிவினை தூண்டுவது என்பது இயற்கைக்கு முரணானது, பேரழிவினை தரக்கூடுயது.

கோட்பாட்டளர்களும் எதிர்ப்பாளர்களும் மட்டுமே HAARP போன்றதொரு அமைப்பினை பற்றி சிந்திக்க கூடாது, ஆராயக்கூடாது. அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் இதுபோன்ற விசயங்களில் உண்மையை கண்டறிந்து பொதுமக்களுக்கு உண்மையை கூறிட வேண்டும்.

Related posts