வணிகம்

பங்கு சந்தை என்றால் என்ன ? – பாகம் 3

கடந்த வார கட்டுரையின் தொடர்ச்சி….

இரண்டாம் விதி:-

AVERAGES ARE DISCOUNTS (MARKETS ARE ALWAYS RIGHT)

இந்த விதி மிக முக்கியமானது, சந்தை எப்பொழுதெல்லாம் மிகப்பெரிய சரிவுகளை சந்திக்கின்றதோ அப்பொழுதெல்லாம் இந்த கேள்வி நம் மனதில் எழும், ஏன் பங்கு சந்தை இவளவு தூரம் வீழ்ச்சியடைய வேண்டும்? இதற்கான காரணம் என்ன? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையை 1884 ஆம் ஆண்டு வாக்கிலே திரு CHARLES DOW அவர்கள் தனது ஆராய்ச்சியின் மூலம் இந்த பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்காக விட்டுச்சென்றுள்ளார், அதைப்பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்,

அதாவது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைகளை நாம் அந்த பங்கின் இன்றைய சொத்து மதிப்புடன் (அசையும் மற்றும் அசையா சொத்துகளின் படி (இவ்விரண்டில் அந்த நிறுவனத்தின் அனைத்து விசயங்களும் அடங்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்)) ஒப்பிட்டுப்பார்த்தால் பங்குகளின் விலைகளில் அநேக ஒற்றுமயின்மையை நீங்கள் காணலாம்,

அதாவது உதாரணமாக ஒரு XYZ என்ற நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 200 கோடி என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகள் 2 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் அந்த XYZ என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் உண்மையான விலை சரியாக 100 ரூபாய் என்று இருக்க வேண்டும், ஆனால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை பங்கு சந்தைகளில் 100 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறதா என்று நீங்கள் பார்த்தல் அந்த விலையில் வர்த்தகம் ஆகாது அதற்க்கு பதில் ரூ 150/- என்ற விலையிலோ, அல்லது ரூ 200/- என்ற விலையிலோ கூட வர்த்தகம் ஆகலாம்.

ஏன் அப்படி சரியான விலையில் வர்த்தக ஆகாமல் குத்து மதிப்பாக இல்லாத விலையில் வர்த்தகம் ஆகிறதே, அப்படியானால் பங்கு சந்தை என்றால் ஏமாற்று வேலையா, இங்கு வியாபாரம் செய்வது சூதாட்டம் என்று சிலர் சொல்கின்றனரே அது உண்மையா, ஏகப்பட்ட பணத்தினை கைகளில் வைத்துள்ளவர்கள் முடிவு செய்து நிர்ணயிப்பது தான் பங்கு சந்தையா, இப்படி எல்லாம் உங்கள் மனதில் கேள்விகள் எழுகிறதா, இதற்கான உண்மையான காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றதா, அப்படி எனில் சற்று பொறுமையாக அடுத்த வார பதிவு வரை காத்து இருங்கள்.

கடந்த வார பதிவில் TECHNICAL ANALYZING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW அவர்கள் பற்றி கொஞ்சம் பார்த்தோம், மேலும் அவர் TECHNICAL ANALYZING ஐ பின் தொடருபவர்கள் கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டிய PRINCIPLES OF TECHNICAL ANALYZING இல் உள்ள மூன்று முக்கியமான தகவல்களில் இரண்டைப் பற்றி சற்று விரிவாக பார்த்தோம் மீதியை இப்பொழுது பார்ப்போம்.

கடந்த வாரம் இரண்டாவது விதியான “AVERAGES ARE DISCOUNTS  (MARKETS ARE ALWAYS RIGHT)” என்ற தலைப்பின் கீழ் சந்தை எதனால் விழுகிறது என்று பார்த்தோம் மேலும் இது போன்று நடப்பதினால் சந்தையின் மீதே சந்தேகம் படும்படியான என்னம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயற்க்கை தான், இருந்தாலும் அதற்கும் காரணம் உண்டு, அதாவது இது போன்ற உயர்வுகள் ஏற்படுவதற்கு காரணமாக அநேக விசயங்களை இங்கு பட்டியலிட முடியும், உதாரணமாக ஒரு சில விஷயங்களை தருகிறேன்.

இது போன்று உயர்வதற்கு நமது ஆசையும் ஒரு காரணமே, அதாவது ஏதாவது ஒரு பொருளுக்கு DEMAND ஏற்படும் சூழ்நிலை வந்தால் எந்த ஒரு வியாபாரியும் எப்பாடுபட்டாவது அந்த பொருளை இப்பொழுது வாங்கி விட வேண்டும் பிறகு நல்ல லாபம் வரும் என்ற எதிர்கால யோசனையோடு வாங்க முனைவோம் இல்லையா அது போன்றுதான்.

மூன்றாவது விதி

PRIMARY TREND CAN NOT BE MANIPULATED

இந்த மூன்றாம் விதி முழுக்க முழுக்க TECHNICAL ANALYZING ஐ சார்ந்தது அதாவது ஒரு பங்கை ஆராய்வதற்கு அந்த பங்கின் விலைகளை வைத்து உருவாக்கப்பட்ட வரைபடத்தை தான் பயன்படுத்துவோம், அப்படி பயன்படுத்தும் போது அங்கு உருவாகும் உருவ அமைப்புகளில் இதுவரைக்கும் ஏற்ப்பட்ட LOW புள்ளிகளில் முக்கியமான இரண்டு புள்ளிகளை இணைத்து வரையப்படும் கோட்டினை இனி வரும் தினங்களில் அந்த பங்கில் ஏற்ப்படும் எந்த ஒரு பெரிய வீழ்ச்சியும் கடந்து கீழே செல்லாது என்பதினை தான் சொல்லி இருக்கின்றார்.

இதுவரை நாம் பார்த்துவந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானதும் TECHNICAL ANALYZING பயில்வதற்கு அடிப்படையான விசயங்களும் ஆகும், இந்த விசயங்களை எப்பொழுதும் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள், அடுத்து சந்தையில் நடக்கும் சில முக்கியமான விஷயங்களைப்பற்றி பார்ப்போம், இப்பொழுது சொல்லும் இந்த விஷயங்கள் தான் TECHNICAL ANALYZE செய்வதற்கு நாம் பயன்படுத்தப்போகும் வரைபட உருவ அமைப்புகள் தோன்றுவதற்கு ஆதாரமான விஷயங்கள், அதாவது பங்கு சந்தையில வர்த்தகம் தினமும் காலை மணி 9.55 க்கு தொடங்கி மாலை 3.30 க்கு முடிவடையும்.

இப்படி நடக்கும் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்தும் காலையில் தொடங்கி (OPEN), மாலை வரை வர்த்தகமாகி இறுதியில் மாலை 3.30 அளவில் முடிவடையும் (CLOSE), இந்த இடைப்பட்ட நேரத்தில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளும் மேலும் (HIGH), கீழும் (LOW) நகர்ந்து இறுதியில் ஒரு குறிபிட்ட விலையில் முடிவடையும் (CLOSE), இப்படிப்பட்ட இந்த நகர்வுகளில் ஏற்ப்படும் மிக முக்கியமான புள்ளிகளான OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்தே நாம் TECHNICAL வரை படங்களை உருவாக்குகிறோம், உருவாக்குகிறோம் என்றால் நாம் உக்கார்ந்து வரைவதில்லை அதற்கென SOFTWARE உள்ளது.

சரி அடுத்த பதிவில் சந்திப்போம்.

Related posts