உலகம்தமிழ்நாடு

தமிழகம் வந்த உக்ரைன் பெண்… மெய்சிலிர்க்க வைக்கும் நட்பின் கதை!

ரஷ்யா – உக்ரைன் போரின் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கடந்த 4 வருடங்களாக உக்ரைனில் மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணனுக்கு, உக்ரைன் வாசியான ஒலேனா என்ற பெண்ணுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.

ஒலேனா தன் வயதான தாய்த்தந்தை மற்றும் 11 வயது மகனுடன் வசித்து வந்தார். நாளுக்கு நாள் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்க உக்ரைனில் வசிக்கும் மக்கள், அவசர அவசரமாக உக்ரைனை விட்டு வெளியேறினர். ஒலேனா தன் குடும்பத்துடன் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணன்‌ இந்தியா செல்வதை அறிந்த ஒலேனாவின் பெற்றோர், தங்களது மகள் மற்றும் பேரனை இந்தியா அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்ற ஹரிகிருஷ்ணன்‌, ஒலேனா மற்றும் அவரது மகனை மதுரையில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஹரிகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்த சில நாட்களிளையே தமிழ்நாட்டு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை கற்றுக்கொண்டுள்ளார் ஒலேனா.

“வந்தோரை வருக வருக என வரவழைப்பது, இன்முகம் காட்டுவது, வருபவருக்கு உண்ண உணவளிப்பது, உபசரிப்பது, வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பது” என்பன தமிழர்களின் தனித்துவமான பண்பாடுகளாகும். இதற்கு எடுத்துக்காட்டாக ஹரிகிருஷ்ணனின் குடும்பம் உள்ளனர்.

தான் நேசித்த தோழிக்கு இக்கட்டான சூழ்நிலை உருவானபோதிலும், அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற ஹரிகிருஷ்ணனின் எண்ணம் ஒலேனா உடனான நட்பின் ஆழத்தை பறைசாற்றுகிறது. ‘நட்புனா இது அல்லவா நட்பு!’

Related posts