Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கினால் விளைவு மோசமாக இருக்கும் – கடும் எச்சரிக்கை விடுத்த பெட்ரோலிய அமைச்சகம்

கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கினால் விளைவு மோசமாக இருக்கும் – கடும் எச்சரிக்கை விடுத்த பெட்ரோலிய அமைச்சகம்

March 20, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சமையல் எரிவாயு சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக நேற்றைய தினம் மட்டும் 6,000 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நெருக்கடி நிலைக்கு மத்தியில் அமைச்சகங்களுக்கு இடையிலான விளக்கக் கூட்டத்தில் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, நேற்று நாடு முழுவதும் மொத்தம் 6,000 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “உத்தரப் பிரதேசத்தில் 1,100 இடங்கள் சோதனைகள் நடத்தப்பட்டு 1,000 கள்ளச்சந்தை சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் 1,632 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு 250 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாகப் பதுக்குவது மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு எதிராகக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 56 லட்சம் சிலிண்டர் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அதில், 55 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விநியோகத்தின் அளவு அதே நிலையில் நீடிக்கிறது என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க :  “பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்துக்குள் மத மாற்ற தடைச் சட்டம்” - பஞ்சாபில் அமித் ஷா வாக்குறுதி

எனவே, விநியோகத்தை ஒழுங்குபடுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. உள்நாட்டு மக்களின் தேவைக்கே மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

நீண்டகால அடிப்படையில், இயற்கை எரிவாயு சிலிண்டரில் இருந்து குழாய் வழி இயற்கை எரிவாயுவிற்கு (PNG) மாற, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உதவ முன்வந்தால், அவற்றுக்குக் கூடுதலாக 10 விழுக்காடு வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சுஜாதா சர்மா உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும், ‘சிலிண்டர் தட்டுப்பாடு’ எனும் பதற்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த முன்பதிவுகள் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அனைவரும் காஸ் முகவர்களின் அலுவலகங்களில் வரிசை கட்டி நிற்காமல், ஆன்லைன் மூலமாக சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், அதன் விநியோகம் தடங்கல் இல்லாமல் நடைபெறும் எனவும் சுஜாதா உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிக்க :  எகிப்தில் நடைபெறும் காசா அமைதி உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு

வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்நிலையில், ஈராக்கின் பஸ்ரா நகருக்கு அருகே மார்ச் 12 அன்று நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, எண்ணெய் கப்பலான ‘எம்டி சேஃப்சீ விஷ்னு’-விலிருந்து மீட்கப்பட்ட 150 கப்பல் பணியாளர்கள் விரைவில் இந்தியா வந்தடைவார்கள் என்றும், அத்தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் விளக்கக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா பிரிவு) அசெம் ஆர். மகாஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், வளைகுடா நாடுகளில் கடற்பரப்பில் உள்ள இந்திய பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் நோக்கில், 24 மணி நேர உதவி எண்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதால், விமானச் சேவைகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் மகாஜன் தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅரசு ஊழியரின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Next Article ஈரான் போர் பதற்றம்: ஓமன் சுல்தான், மலேசிய பிரதமர், பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.