அரசியல்இந்தியா

‘இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழக பாஜக அனுமதிக்காது’- அதிரடி காட்டிய அண்ணாமலை!

‘இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழக பாஜக அனுமதிக்காது’- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழக பாஜக ஏற்காது என்று அதிரடியாக பேசியுள்ளார்.

இணைப்பு மொழி

பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்தார். அதாவது இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி பயன்படுத்தலாம் என்று கூறினார். மேலும், வேற்று மொழியான ஆங்கிலத்திற்கு பதிலாக இந்திய மொழியான இந்தி அலுவல் மொழியாக பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்றார்.

இந்தி தெரியாது போடா ட்ரெண்டிங்

அமித்ஷாவின் இந்த பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து #இந்தி_தெரியாது_போடா என்ற ஹாஷ்டாக் மீண்டும் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஏ.ஆர். ரகுமான் ட்விட்

இசைமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு என்ற வாசகத்தோடு ஒரு புகைப்படத்தை வெளிட்டார். இதை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து வந்தனர்.  பலர், ஏ.ஆர். ரகுமான் ஏன் இந்த புகைப்படத்தை வெளிட்டார் என்ற கேள்வியையும் எழுப்பினர். இன்னும் சிலர் இது அமிட்ஷாவுக்கு ஏ.ஆர். ரகுமான் மறைமுகமா கொடுக்கும் பதிலடி என்ற கருத்தினையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.


தமிழ் தான் இணைப்பு மொழி

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஏ.ஆர். ரகுமானிடம், செய்தி நிரூபர் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்தலாம் என்று அமிட்ஷா கூறியதை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஏ.ஆர். ரகுமான் ‘தமிழ் தான் இணைப்பு மொழி’ என்று பதில் கூறி விட்டு அங்கே இருந்து புறப்பட்டார்.

அமிட்ஷாவின் பேச்சுக்கு பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை அதிரடி கருத்து

இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழக பாஜக ஏற்காது என்றும், ஏ.ஆர். ரகுமான் கூறிய, தமிழ் மொழி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என்ற கருத்தையும் நான் ஏற்கிறேன் என்றார்.

அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தமிழ் பள்ளிகளை நிறுவ தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கட்டாய தமிழ் மொழியே பயில வேண்டும் என்ற புதிய கல்வி கொள்ளையை கொண்டு வந்தது பாஜக அரசு தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார் அண்ணாமலை.

இறுதியாக, ‘இங்கு எத்தனை பேருக்கு இந்தி பேச தெரியும் என்று எனக்கு தெரியாது ஆனால் எனக்கு இந்தி பேச தெரியாது’ என்று அதிரடியான கருத்தை பதிவு செய்தார்.

Related posts