இலவசங்கள் கொடுத்ததால் வளர்ச்சி என்பதை திமுக நிரூபிக்க முடியுமா என பாஜக தலைவர் அண்ணாமலை என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், ‘மது விற்பனையை நம்பி ஆட்சி நடத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இலவசங்கள் கொடுத்ததால் வளர்ச்சி என்பதை திமுக நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று அரசு கூறினால் அதை மீண்டும் செய்ய நாங்கள் அஞ்ச மாட்டோம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், துன்புறுத்தலாம். உங்கள் அடக்குமுறையை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தமிழகம் குட்டி இலங்கையாக மாறுகிறது’ என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

