சினிமா

தொடர் தோல்வியில் நடிகர் ஜெய்.. கைகொடுக்குமா ‘குற்றம் குற்றமே’!

ஜெய் நடிக்கும் குற்றம் குற்றமே திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் மற்றும் பாடல் வெளியாகியுள்ளது. ஜெய் நடிப்பில் திரைக்கு வந்த பல படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் இத்திரைப்படம் வெற்றியடையுமா?

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் குற்றம் குற்றமே. முதல் படமான வீரபாண்டியபுரம் 2022 ஆம் ஆண்டு வெளிவந்து, வியாபாரரீதியாக வெற்றியடையாத நிலையில் மீண்டும் சுசீந்திரனுடன் கைகோர்த்துள்ளார் ஜெய். பல ஆண்டுகளாக தோல்விகளை சந்தித்து வரும் ஜெய்க்கு வீரபாண்டியபுரம் நல்ல கம் பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் கலைஞர் தொலைக்காட்சியில் நேரடியாக ஏப்ரல் 14 வெளிவரவுள்ளது. குற்றம் குற்றமே திரைப்படத்தின் டிரெய்லருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

குற்றம் குற்றமே படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஹரிஸ் உத்தமன், திவ்யா துரைசாமி, ஸ்ம்ருதி வெங்கட், அருள் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். குற்றம் குற்றமே ஒரு க்ரைம் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், குற்றம் குற்றமே படத்தின் ‘மாமன் மகளே’ என்றப் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மாமன் மகளே பாடல் எப்படி இருக்கு?

Related posts