சினிமா

காணாமல் போன தேசிய விருது நாயகி பிரியா மணி.. கம் பேக் தேடும் ‘பாமா கலாபம்’ திரைப்படம்!

‘பாமா கலாபம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியது. பிரியாமணி நடிப்பில் ஏப்ரல் 14-ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஆஹா OTT தளத்தில் படம் வெளியாக உள்ளது. தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘பாமா கலாபம்’ தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியாக உள்ளது.

நடிகையும், முன்னாள் மாடலும் ஆன பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சில வருடங்களாக தமிழில் பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்துள்ளது.

தமிழில் பிரியாமணி நடிப்பில் பருத்திவீரன் (2007), ராம் (2009), ராவணன் (2010), பிராஞ்சியேட்டன் & தி செயிண்ட் (2010), சாருலதா (2012) மற்றும் ஐடோல் ராமாயணம் (2016) போன்றப் படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. திரைப்படங்களைத் தவிர தென்னிந்திய மொழிகளில் பல நடன ரியாலிட்டி ஷோக்களில் பிரியாமணி நடுவராக இருக்கிறார்.

பிரியாமணி, 2003 ஆம் ஆண்டு ‘எவரே அட்டகாடு, என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் களமிறங்கினார். 2007 ஆம் ஆண்டில் பருத்திவீரன் என்ற தமிழ் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பருத்திவீரன் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பிரியாமணிக்கு பெற்றுத்தந்தது. சிறந்த நடிகைக்கான மூன்று பிலிம்பேர் விருதையும் பிரியாமணி பெற்றுள்ளார்.

‘பாமா கலாபம்’ ட்ரைலர் சொல்லும் கதை: கதாநாயகியான பிரியாமணி, அனுபமா மோகன் என்ற ஒரு இல்லத்தரசியாகவும் மற்றும் யூடியூபராகவும் இருக்கிறார். சமையலில் கைத் தேர்ந்தவராகவும் திகழ்கிறார். இச்சூழலில் அவரைச் சுற்றி சில குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெறுகிறது. இதில் இருந்து பிரியாமணி எப்படி தப்பிக்கிறார் என்பதே பாமா கலாபம் ட்ரைலரில் சொல்லப்பட்டுள்ள கதை. இதை நகைசுவைக் கலந்தும், திரில்லர் கலந்தும் கூறி இருக்கிறார் இயக்குனர்.

சமீப நாட்களாக ஆஹா OTT, தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் திரைப்படங்களை வெளியிட்டு வெற்றி அடைந்து வருகிறது.

நீங்க பார்த்து வியந்த தமிழ் படம் எது?