அரசியல்தமிழ்நாடு

பீஸ்ட் மூடில் அன்பில் மகேஷ்.. தட்டிக்கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு, தள்ளி வைக்கப்பட்ட சட்டப்பேரவை, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த மீண்டும் கூடியது. மே மாதம் 10ஆம் தேதி வரை நடக்கும் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறையின் மானிய கோரிக்கைக்கான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அச்சு பிசறாமல் அணைத்து புள்ளி விவரங்களையும் எந்த ஒரு குறிப்புகளையும் பார்க்காமல் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் அன்பில் மகேஷ் பேசியதை வியந்து கேட்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “அருமை, அற்புதம் ,அபாரம் ” என்று தன் கைப்பட பேப்பரில் எழுதிக் கொடுத்து அவையில் வைத்தே பாராட்டினார். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பல முக்கியமான துறைகளை புது முகங்களுக்கு என ஒதுக்கினார்.

அதில் பள்ளிக்கல்வித் துறையை புது முகமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கினார். அன்பில் மகேஷ், ஸ்டாலினின் புதல்வன் உதயநிதி ஸ்டாலிக்கு மிக நெருங்கிய நண்பர் ஆவார். அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அவருக்கு துறை வழங்கப்பட்டது என்று எதிர்கட்சிகளான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்தனர்.

இந்நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையை கேட்டு அனைத்து கட்சியினரும் வாயடைத்து போனார்கள். முதல்வராகியுள்ள ஸ்டாலின் தனது அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். அந்த அறிவுரை அன்பில் மகேஷின் பேச்சிலும் எதிரொலித்தது. தான் சார்ந்த துறையை பற்றி நன்கு அறிந்திருந்தால் மட்டுமே இவ்வாறு பேச முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

Related posts