திருச்சி அருகே பச்சிளம் நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி துடிதுடிக்க கொலை செய்த பெண்ணின் கொடூர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அடுத்த கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு உணவு வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் புவனேஸ்வரி வீட்டின் எதிரே வசிக்கும் மீனாட்சி மிஸ்ரா என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்கப்படுவதை விரும்பாத மீனாட்சி மிஸ்ரா அடிக்கடி அப்பகுதியில் உலாவும் மாடுகள், நாய்கள் உள்ளிட்டவற்றை கம்பால் அடித்து விரட்டுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிறந்து சில நாட்களே ஆன நாய்க்குட்டிகள், தங்களது தாயைத்தேடி குரைத்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த மீனாட்சி மிஸ்ரா நாய்க் குட்டிகளை சுவற்றில் அடித்துக் கொடூரமாக கொன்றார். இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களுடன் புவனேஸ்வரி அளித்த புகாரில் வழக்குப்பதிந்து மீனாட்சி மிஸ்ராவை ஜீயபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.

