Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»மருத்துவம்»இளம் பெண்களை குறிவைக்கும் மார்பக புற்றுநோய்! 2050ல் 3.5 மில்லியனாக பாதிப்பு அதிகரிக்கும்! தி லான்செட் ஆய்வு எச்சரிக்கை!

இளம் பெண்களை குறிவைக்கும் மார்பக புற்றுநோய்! 2050ல் 3.5 மில்லியனாக பாதிப்பு அதிகரிக்கும்! தி லான்செட் ஆய்வு எச்சரிக்கை!

March 3, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உலக அளவில் பெண்களை பாதிக்கும் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோய் உள்ளது. 1990 முதல் 2023 வரையிலான காலகட்டத்தை ஆய்வு செய்து ‘லான்செட் ஆன்காலஜி’ இதழ் வெளியிட்டுள்ள புதிய தரவுகள், இந்த நோயின் பரவல் மற்றும் உயிரிழப்பு விகிதம் வரும் ஆண்டுகளில் தீவிரமடையும் என்பதை காட்டுகின்றன.

குறிப்பாக, வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இதன் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2050ம் ஆண்டிற்குள் உலகளாவிய பாதிப்பு 35 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவின் பங்கு மற்றும் இளவயது பெண்களிடையே அதிகரித்து வரும் பாதிப்பு ஆகியவை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய நிலவரம் என்ன? உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, 2022ல் 23 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டது. லான்செட் ஆய்வின்படி, இந்த எண்ணிக்கை 2050ல் 35 லட்சமாக உயரும் என்கிறது. அதேபோல், ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7.6 லட்சத்திலிருந்து 14 லட்சமாக (44%) அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் கேய்லி பாங்டியா இது குறித்து கூறுகையில், “உயர் வருமானம் கொண்ட நாடுகளில் ஆரம்பக்கட்ட பரிசோதனை வசதிகள் இருப்பதால் உயிரிழப்புகள் கட்டுக்குள் உள்ளன. ஆனால், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால் மரண விகிதம் அதிகரித்து வருகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  ஓபிஎஸ் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம்பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் !

இந்தியாவில் மார்பகப் புற்றுநோயின் தீவிரம்: இந்திய புற்றுநோய் சங்கத்தின் தரவுப்படி, இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் புள்ளிவிவரங்கள் மிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன என்கிறது தரவுக

1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-இல் பாதிப்பு எண்ணிக்கை 477.8% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2.03 லட்சம் நபர்களுக்கு புதிதாக பாதிப்பு பதிவாகியுள்ளன என்கிறது. மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 352.3% உயர்ந்துள்ளன. 2023-இல் 1.02 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட புள்ளிவிவரப்படி, ஒரு லட்சம் பெண்களுக்கு 29 புதிய பாதிப்புகள் வீதம் பதிவாகியுள்ளது. இது 1990-ஐ விட 126.9% அதிகம். இதேபோல் மரண விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் 74% அதிகரித்துள்ளது. இந்தியாவைத் தவிர்த்து லாவோஸ் (214%), வங்கதேசம் (91%), வியட்நாம் (80%) போன்ற நாடுகளிலும் மரண விகிதம் பெருமளவு உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க :  ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் பறிபோன உயிர் !

இளவயதுப் பெண்களிடையே அதிகரிக்கும் பாதிப்பு: ஆய்வின்படி, 55 வயதிற்கு மேற்பட்டோருக்குப் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், 20 முதல் 54 வயதுக்குட்பட்ட பெண்களிடையே புதிய பாதிப்புகள் 29% அதிகரித்துள்ளது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முந்தைய நிலையில் இருக்கும் இளவயதுப் பெண்களிடம் இம்மாற்றம் தெரிவது குறிப்பிடத்தக்கது.

சுமார் 25 சதவீத பாதிப்புகளை சரியான வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகப்படியான சிவப்பு இறைச்சி (Red Meat) உட்கொள்ளுதல், புகையிலை மற்றும் மதுப் பழக்கம், உடல் பருமன் (High BMI) மற்றும் போதிய உடல் உழைப்பு இல்லாமை, ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு ஆகியவை புற்றுநோயை தூண்டும் முக்கிய காரணிகளாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1990 முதல் 2023 வரை மது மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வால் ஓரளவுக்கு முன்னேற்றம் தெரிந்தாலும், உடல் பருமன் மற்றும் சர்க்கரை அளவு தொடர்பான காரணிகளில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.

ஆய்வாளர்களின் பரிந்துரைகள்: டாக்டர் லிசா ஃபோர்ஸ், “அனைத்து நாடுகளிலும் ஆரம்பக்கட்ட நோயறிதல் வசதிகள் இருக்க வேண்டும். சிகிச்சைக்கான செலவை குறைப்பதும், உலகளாவிய சுகாதார காப்பீட்டில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சையை சேர்ப்பதும் நோயாளிகளை பொருளாதார சுமையிலிருந்து பாதுகாக்கும்” என தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசின்னம்மை அபாயம்! தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
Next Article மாதவிடாய்: முதல் நாளில் வலி அதிகமாக இருப்பது ஏன்? சமாளிக்க என்ன செய்வது?

Related Posts

மருத்துவம்

“புரத உட்கொள்ளலை குறைப்பது கல்லீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்” – யாருக்கெல்லாம் பொருந்தும்?

March 24, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
மருத்துவம்

முதுகு வலிக்கு காரணமாகும் வைட்டமின் டி குறைபாடு – தடுப்பது எப்படி?

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.