தமிழ்நாடுமருத்துவம்

குரங்கு அம்மை தொற்று நோய் அல்ல; தமிழக மக்களுக்கு அமைச்சர் விளக்கம்!

அன்டை மாநிலங்களில் பரவும் குரங்கு அம்மை தொற்று நோய் அல்ல என WHO தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

12 நாடுகளில் குரங்கம்மை

கடந்த சில நாட்களாக குரங்கு அம்மை தொற்று பரவலில் உள்ளது. ஆப்பிரிக்காவில் மட்டும் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய்த்தொற்று ஐரோப்பாவிலும் பரவ தொடங்கி இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 12 நாடுகளிலும் குரங்கு அம்மை நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தீவிர தடுப்பு நடவடிக்கை

உடம்பில் கொப்பளங்கள், தடுப்புகள், தொடர் காய்ச்சல் ஆகியவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாக கண்டறியப்படுகின்றன. இந்த குரங்கு அம்மை நோய்த்தொற்று பெரியம்மையை ஒத்துள்ளது. குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்து பிற நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பதற்றப்பட வேண்டாம்

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது ‘உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில் பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கம்மை நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்தான அச்சம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், இது தொற்றுநோய் இல்லை என WHO அறிவித்துள்ளது. இதனால், குரங்கம்மை குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம்.

கண்காணிப்பு

குரங்கம்மை நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் கண்காணிக்கபடுகின்றனர். அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என கூறினார்.

Related posts