Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»புழல் சிறை கைதி ‘திடீர்’ மரணம்: போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

புழல் சிறை கைதி ‘திடீர்’ மரணம்: போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

February 20, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில், போலீசார் அடித்து துன்புறுத்தியதாலேயே அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் புனிதன். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. இதனிடையே, கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் புனிதன் மற்றும் எதிர் தரப்பினரிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

அப்போது எதிர்தரப்பினர் புனிதன் மீது நகையை திருடியதாக அளித்த புகாரின் அடிப்படையில், சங்கர் நகர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாமினில் வெளியே வந்த புனிதன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிக்க :  'ஷூ' அணியாமல் வந்த மாணவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்த ஆசிரியை!

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் (NBW) உள்ளது எனக் கூறி புனிதனை போலீசார் அழைத்துச் சென்று, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.19) மதியத்திலிருந்து புனிதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேரம் ஆக ஆக, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். அங்கு கைதிகளின் வார்டில் சிகிச்சை பெற்று வந்த புனிதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் படகு கவிழ்ந்து விபத்து – பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலா பயணி கடலில் மூழ்கி உயிரிழப்பு
புனிதன் உயிரிழந்த செய்தி அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்கள், புனிதனுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைபாடு இருந்ததாகவும், கைது செய்யும் போது அது குறித்து தெரிவித்த போதும், அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் சிறையில் அடைத்ததாகவும் அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் புனிதனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், சிறையில் அடித்து துன்புறுத்தப்பட்டதே மரணத்திற்கு காரணம் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிக்க :  திருமணத்துக்கு மீறிய உறவை கண்டித்த கணவன் கொலை: மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

இறந்த உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லும் போது, உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின் தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரபல கன்னட நடிகை ரஷ்மி லீலா திடீர் மரணம்
Next Article வாடகைக்கு குடியேறி நூதன கொள்ளையில் ஈடுபட்ட குடும்பம்; 16 வயது சிறுமி உட்பட இருவர் கைது

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.