Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»இஷான் கிஷன், பாண்டியா விளாசலில் இந்தியாவுக்கு 2-வது வெற்றி

இஷான் கிஷன், பாண்டியா விளாசலில் இந்தியாவுக்கு 2-வது வெற்றி

February 13, 20265 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்​திய அணி 93 ரன் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா, நமீபி​யா​வுடன் மோதி​யது. இந்​திய அணி​யில் உடல் நலக்​குறைவு காரண​மாக அபிஷேக் சர்மா களமிறங்​க​வில்​லை.

அவருக்கு பதிலாக சஞ்சு சாம்​சன் களமிறங்​கி​னார். முகமது சிராஜ் நீக்​கப்​பட்டு ஜஸ்​பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டார். முதலில் பேட் செய்த இந்​திய அணிக்கு சஞ்சு சாம்​சன், இஷான் கிஷன் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. ரூபன் டிரம்​பல்​மேன் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தை சாம்​சன் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார்.

பென் ஷிகோங்கோ வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்​சி​யாக 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி விளாசிய சஞ்சு சாம்​சன் கடைசி பந்​தில் டீப் மிட்விக்​கெட் திசை​யில் ஃபிளிக் செய்த போது லோரன் ஸ்டீன்​காம்​பிடம் கேட்ச் ஆனது. 8 பந்துகளை சந்​தித்த சஞ்சு சாம்​சன், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 22 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து கமிறங்​கிய திலக் வர்​மா, ரூபன் டிரம்​பல்​மேன் வீசிய 5-வது ஓவரில் 2 பவுண்​டரி​கள் அடித்​தார். ஜேஜே ஸ்மித் வீசிய 6-வது ஓவரில் இஷான் கிஷன் தொடர்ச்​சி​யாக 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி விளாசி மிரட்டி​னார். அதிரடி​யாக விளை​யாடிய இஷான் கிஷன் 20 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் தனது 8-வது அரை சதத்தை கடந்​தார். பவர்​பிளே​வில் இந்​திய அணி 86 ரன்​கள் குவித்​தது.

மேக்ஸ் ஹெய்ங்கோ வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷன் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரியை அடித்​தார். திலக் வர்மா தனது பங்​குக்கு ஒரு பவுண்​டரி விரட்​டி​னார். மட்​டையை சுழற்​றிய இஷான் கிஷன் 24 பந்​துகளில், 6 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​களு​டன் 61 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஜெரார்டு எராஸ்​மஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இந்த 61 ரன்​களில் இஷான் கிஷன் 7 ரன்​களை மட்​டுமே ஓடி எடுத்​தார். மற்ற 54 ரன்​களும் பவுண்​டரி, சிக்​ஸர்​கள் வாயி​லாக எடுத்திருந்தார்.

2-வது விக்​கெட்​டுக்கு இஷான் கிஷன், திலக் வர்மா ஜோடி 79 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து சூர்​யகு​மார் யாதவ் களமிங்​கி​னார். 10 ஓவர்​களில் இந்​திய அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 120 ரன்​கள் குவித்​தது. சூர்​யகு​மார் யாதவ் 13 பந்துகளில், 12 ரன்​கள் எடுத்த நிலை​யில் பெர்​னார்ட் ஸ்கோல்ட்ஸ் வீசிய பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளாச முயன்ற போது ஸ்டெம்​பிங்க் முறை​யில் ஆட்டமிழந்​தார்.

இதைத் தொடர்ந்து திலக் வர்மா 21 பந்​துகளில், 3 பவுண்டரி​களு​டன் 25 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜெரார்டு எராஸ்​மஸ் பந்​தில் வெளி​யேறி​னார். 5-வது விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய ஹர்​திக் பாண்​டி​யா, நமீபியா பந்​து​வீச்சை பதம் பார்த்​தார். பெர்​னார்ட் ஸ்கோல்ட்ஸ் வீசிய 15-வது ஓவரில் ஹர்​திக் பாண்​டியா தலா ஒரு சிக்​ஸர், பவுண்டரியை விளாசி​னார். ஷிவம் துபே​வும் இந்த ஓவரில் ஒரு சிக்​ஸர் பறக்​க​விட்​டார்.

இதையும் படிக்க :  தோனியின் பிறந்த நாளையொட்டி ரசிகர்களின் இன்ப அதிர்ச்சி !

பென் ஷிகோங்கோ வீசிய அடுத்த ஓவரில் ஹர்​திக் பாண்டியா 2 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர் அடித்​தார். மட்​டையை சுழற்​றிய ஹர்​திக் பாண்​டியா 27 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் அரை சதம் கடந்​தார். இது அவரது 8-வது அரை சதமாக அமைந்​தது.

அதிரடி​யாக விளை​யாடிய ஹர்​திக் பாண்​டியா 28 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜெரார்டு எராஸ்​மஸ் பந்​தில் ஆட்டமிழந்தார். அப்​போது ஸ்கோர் 18.2 ஓவர்​களில் 205 இருந்​தது. இதைத் தொடர்ந்து ஷிவம் துபே 16 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 23 ரன்​கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

அக்​சர் படேல் 0, ரிங்கு சிங் 0, அர்​ஷ்தீப் சிங் 2 ரன்​களில் நடையை கட்​டினர். 20 ஓவர்​களில் இந்​திய அணி 9 விக்கெட்கள் இழப்​புக்கு 209 ரன்​கள் குவித்​தது. கடைசி 11 பந்​துகளில் இந்​திய அணி 5 விக்​கெட்​களை பறி​கொடுத்த நிலை​யில் 4 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தது.

நமீபியா அணி சார்​பில் ஜெரார்டு எராஸ்​மஸ் எராஸ்​மஸ் 4 ஓவர்​களை வீசி 20 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்​தி​னார். பென் ஷிகோங்​கோ, ஜேஜே ஸ்மித், பெர்​னார்ட்​ ஸ்கோல்ட்​ஸ்​ ஆகியோர்​ தலா ஒரு ​விக்கெட் கைப்பற்றினர்.

210 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நமீபியா அணி 18.2 ஓவர்​களில் 116 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக லோரன் ஸ்டீன்​காம்ப் 20, ஜான் ஃப்​ரைலின்க் 22, கேப்​டன் ஜெரார்டு எராஸ்​மஸ் 18, ஜான் நிக்​கோல் லோஃப்​டி-ஈடன் 13, ஜேன் கிரீன் 11 ரன்​கள் சேர்த்​தனர். ஜேஜே ஸ்மித் 0, மலான் க்ரூகர் 5, பெர்​னார்ட் ஸ்கோல்ட்ஸ் 4, பென் ஷிகோங்கோ 0 ரன்​களில் நடையை கட்​டினர்.

இந்​திய அணி தரப்​பில் வருண் சக்​ர​வர்த்தி 3, அக்​சர் படேல் 2, ஹர்​திக் பாண்​டியா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். அர்ஷ்தீப் சிங், ஜஸ்​பிரீத் பும்​ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் அமெரிக்​காவை வீழ்த்தியிருந்​தது. இந்த இரு வெற்​றிகளின் மூலம் இந்​திய அணி 4 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் முதலிடத்​துக்கு முன்னேறியது.

டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் இந்​திய அணி​யின் தொடர்ச்​சி​யான 10-வது வெற்​றி​யாக இது அமைந்​தது. ஆட்ட நாயக​னாக ஹர்​திக் பாண்​டியா தேர்​வா​னார். இந்திய அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் வரும் 15-ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்​தானுடன் பலப்​பரீட்​சை நடத்துகிறது.

இதையும் படிக்க :  சூடு பறக்க களமிறங்கும் டெல்லி - லக்னோ அணிகள்!

ஒரே ஓவரில் 28 ரன்கள்

நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன், ஜே.ஜே.ஸ்மிட் வீசிய 6-வது ஓவரில் 28 ரன்களை விளாசினார். இந்த வகையில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். 2024-ல் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரில் 28 ரன்களை விளாசியிருந்தார். இந்த வகையில் 2007-ல் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் யுவராஜ் சிங் 36 ரன்களை விளாசியதே முதலிடத்தில் உள்ளது.

20 பந்துகளில் அரை சதம்

இஷான் கிஷன் 20 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் அவர், 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். யுவராஜ் சிங் 12 பந்துகளிலும் (2007), கே.எல்.ராகுல் 18 பந்துகளிலும் (2021), ரோஹித் சர்மா 19 பந்துகளிலும் (2024), யுவராஜ் சிங் 20 பந்துகளிலும் (2007) அரை சதம் விளாசி முதல் 4 இடங்களில் உள்ளனர்.

‘6 ஓவரில் 50’

டி20 ஆட்டத்தில் முதல் 6 ஓவர்களில் 50 ரன்களை 2-வது முறையாகக் கடந்துள்ளார் இஷான் கிஷன். இதே வகையான சாதனையை அபிஷேக் சர்மா 3 முறையும், ரோஹித் சர்மா 2 முறையும், கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா ஒரு முறையும் செய்துள்ளனர்.

அதிக வயதில் அறிமுகம்

டி20 உலகக் கோப்பையில் அதிக வயதில் அறிமுகமாகியுள்ள இந்திய வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் சஞ்சு சாம்சன் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் அறிமுகமான சஞ்சு சாம்சன் 31 ஆண்டு, 93 நாட்களை நிறைவு செய்துள்ளார். இந்த வகையில் அமித் மிஸ்ரா (31 ஆண்டு, 117 நாட்கள்) முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் (31 ஆண்டு, 40 நாட்கள்) 3-வது இடத்திலும், ஆசிஷ் நெஹ்ரா (31 ஆண்டு, 2 நாட்கள்) 4-வது இடத்திலும், லஷ்மிபதி பாலாஜி (30 ஆண்டு, 358 நாட்கள்) 5-வது இடத்திலும் உள்ளனர்.

47-வது முறையாக 200+ ஸ்கோர்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 209 ரன்கள் குவித்தது. சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 47-வது முறையாகும். அதேவேளையில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 200 ரன்களை கடப்பது இது 4-வது முறையாகும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னையில் பெண் காவலர் விபரீத முடிவு: கணவன் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
Next Article இத்தாலிக்கு முதல் வெற்றி – சகோதர ஜோடி சாதனை!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.