பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார் . இது குறித்து அவர், ’44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக கையாண்டு சிறப்பாக நடத்தியுள்ளீர்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்’ என அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார. ‘உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்’ என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Thank you Hon’ble PM @narendramodi for your kind words of praise.
Hospitality & Self-respect are two inseparable qualities of Tamils.
I seek your constant support & request that Tamilnadu be rewarded with more opportunities to host such global events.#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர் https://t.co/CRPKdFVGIL
— M.K.Stalin (@mkstalin) August 11, 2022

