வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ஜி.எம்.சுந்தர், மஞ்சுவாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், துணிவு படத்தில் அஜித்தின் புகைப்படங்களை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
#Thunivu HD images.#NoGutsNoGlory #ThunivuPongal pic.twitter.com/pvlJMp5mvK
— Zee Studios South (@zeestudiossouth) January 3, 2023

