சினிமாவெள்ளித்திரை

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

நடிகர் வடிவேலு நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ்

நடிகர் வடிவேலு நடிப்பில் கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இயக்குனர் சுராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, லொள்ளு சபா சேஷு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற 6-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts