ரிலீஸ் தேதி
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இந்த படம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. இதனையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘மைக்கேல்’. இதில், சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘மைக்கேல்’ படம் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Meet the Man who Loved the Hardest #MICHAEL 🖤
Worldwide only in Theatres on
Feb 3rd, 2023 🔥#MichaelfromFEB3rd 👊🏾@VijaySethuOffl @Divyanshaaaaaa @menongautham @anusuyakhasba @jeranjit @itsvarunsandesh @SamCSmusic @SVCLLP @KaranCoffl #NarayandasNarang pic.twitter.com/5NEnI0KZgW— Sundeep MICHAEL Kishan (@sundeepkishan) January 3, 2023