தணிக்கை சான்றிதழ்
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. குறிப்பாக இதன் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனிடையே இந்த படத்தின் ரன்னிங் டைம் 2.50 மணி நேரம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வாரிசு படத்திற்கு அனைவரும் பார்க்கும் விதமாக ‘யு’ சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது.

