துணிவு நாள்
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வெளியாகவுள்ளது.
இதன் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகியுள்ளது. இதனிடையே 31-ம் தேதியான இன்று துணிவு நாள் என்றும் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.
அப்டேட்
இந்நிலையில், துணிவு படத்தில் மோகன சுந்தரம் , மைபா என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் பிரேம், பிரேம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அஜித் கதாபாத்திரத்தின் பெயர் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

