சினிமாவெள்ளித்திரை

பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்!

புதிய கூட்டணி

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் பா.ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். மேலும், இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பு ஒன்றை அமைத்து ‘மார்கழியின் மக்களிசை’ எனும் இசை விழாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடித்தி வருகிறார். இந்நிலையில், விரைவில் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இந்த கூட்டணியின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts