வைரல் டீசர்
‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர்.சி. இவர் இயக்கிய அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கதாநாயகனாக நடித்து கடந்த 2006ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை சுராஜ் இயக்கியிருந்தார்.இதனையடுத்து தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் தொடங்கியது. இதிலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க, வி.இசட் .துரை இயக்குகிறார். இவர் ஏற்கனவே சுந்தர்.சி நடிப்பில் வெளியான ‘இருட்டு’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘தலைநகரம்-2’ படத்தின் டீசர் இன்று வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

