ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘சந்திரமுகி 2’, ‘ருத்ரன்’ ‘அதிகாரம்’, ‘துர்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள ‘அதிகாரம்’ படத்திற்கு வெற்றி மாறான் கதை, திரைக்கதை, எழுதியுள்ளார். அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்பிறகு இப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ‘அதிகாரம்’ படத்தின் திரைக்கதை பணிகளும் படப்பிடிப்பு திட்டங்களும் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

