படப்பிடிப்பு
2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் திரைப்படம் ‘பத்து தல’. இதில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Finally It’s a wrap for #PathuThala … Cant wait for you all to witness #AGR … Thanks to my whole team for all the support and love 🙂 @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna pic.twitter.com/mAntbQhuiY
— Silambarasan TR (@SilambarasanTR_) November 23, 2022

