ஆன்மீகம்இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை வெளியீடு!

திருப்பதி தேவஸ்தானம்

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதியில் பக்தர்கள் குறைந்த அளவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை காலை 10 மணியளவில் திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளாலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts