விஜய் படம்
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் பொங்கல் தினத்தன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
புதிய சிக்கல்
இந்நிலையில், சென்னை அருகே நடைபெற்று வரும் வாரிசு படப்பிடிப்பில் உரிய அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் படக்குழு யானையை வாகனத்தில் அழைத்து வர மட்டுமே அனுமதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், உரிய ஆவனங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

