தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
ரிலீஸ் தேதி
இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற ஹிந்தி படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைப் கதாநாயகியாக நடிக்க, அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் தொழில் நுட்ப பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

