தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த வாரம் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
சிறப்பு பேருந்துகள்
இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிவடைந்ததையொட்டி நேற்று முதல் மக்கள் சென்னை திரும்பி கொண்டு இருக்கிறார்கள். இதனிடையே ரயில்கள், அரசு பேருந்துகளில் வரும் மக்கள் வீடுகளுக்கு செல்லும்போது ஆட்டோக்களில் ரூ.200 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதில் தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து மட்டும் சுமார் 100 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

