சினிமாவெள்ளித்திரை

தனுஷ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஓடிடி ரிலீஸ்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேசன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். கடந்த மாதம் 29-ம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படம் வரும் 27-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts